workers
Image Credits- Saudi Gazette

சவூதியில் 50,000 தொழிலாளர்கள் 2,000 புதிய கட்டிடங்களுக்கு இடமாற்றம்..! ஏன்?

சவூதியில் கூட்டநெரிசலை தவிப்பதற்காக தொழிலாளர் வீட்டு வசதி கமிட்டியானது 50,000 தொழிலாளர்களை 2,000 புதிய கட்டிடங்களுக்கு மாற்றியுள்ளது. அதுமட்டுமின்றி தொழிலாளர்கள் மத்தியில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதற்கான வாய்ப்புகளை குறைப்பதற்காக, ஒவ்வொரு ஹவுஸிங் காம்பவுண்டிலும் தனிமைப்படுத்தும் அறைகளை வழங்குவதற்காக தொழிலாளர் வீட்டு வசதி கமிட்டியானது தனியார் துறையினரின் செயல்பாடுகளை கவனித்து வருகிறது என்று நகராட்சி மற்றும் கிராம விவகார அமைச்சகத்தின் (MMRA) துணை செயலாளர் டாக்டர் அஹ்மத் கட்டான் வெள்ளிக்கிழமை (நேற்று) உறுதிப்படுத்தினார்.

மேலும், தொழிலாளர் வீட்டுவசதியில் தற்போதைய சவால்கள் மற்றும் முன்மொழியப்பட்ட தீர்வுகள் என்ற தலைப்பில் கிழக்கு மாகாண சேம்பரில் வியாழக்கிழமை நடைபெற்ற (remotely) சிம்போசியத்தின் போது கட்டான் கூறுகையில், கட்டிடங்களை தொழிலாளர் வீட்டுவசதி யூனிட்டுகளாக மாற்ற நிறுவனங்களுக்கு தேவையான தொழிலாளர் வீட்டு வசதி உரிமங்களை அந்நிறுவனங்களுக்கு அமைச்சகம் வழங்கும் என்று கூறினார்.

தற்போது இருக்கக்கூடிய தொழிலாளர்கள் தங்குமிடத்திற்கு இணையான கட்டிடத்தை உருவாக்கும் நோக்கத்திற்காக ரியல் எஸ்டேட் வல்லுனர்களின் ஒத்துழைப்புடன் முதலீடு செய்து சவூதியில் பல்வேறு பகுதிகளில் உள்ள பெரிய நிலங்களை இத்திட்டத்திற்காக ஒதுக்குவதே முக்கிய நோக்கமாகும்.

தொழிலாளர்கள் வீட்டுவசதிகளை படிப்படியாக ஒழுங்குபடுத்தும் இச்செயல்முறையனது மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் என்றும், வாடகை (Ijaar) தளத்தில் தொழிலாளர்களுக்கு தற்போதுள்ள வழக்கமான வீட்டுவசதிகளுடன், அவர்களது பணி அனுமதிகளையும் (work permits) இணைப்பது மட்டுமின்றி நிறுவனங்களுக்கு அவர்களது நிலையை சரிசெய்ய தேவையான கால அவகாசமும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Saudi Gazette

Related posts