accident

சவூதியில் சாலை விபத்து – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உட்பட 7 பேர் பலி

ரியாத்தில் நேற்று அதிகாலை நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உட்பட 7 பேர் பலியானதாக சவூதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அல் ஹெய்ர் – அல் ஹரிக் சாலையில் இரண்டு வாகனங்களுக்கு இடையே ஏற்பட்ட இந்த விபத்தில் சவூதியைச் சேர்ந்த ஒருவரும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரும் பலியாகியுள்ளனர். அதேபோல விபத்துக்குள்ளான மற்றொரு காரை ஓட்டி வந்த இளைஞரும் உயிரிழந்துள்ளார். இவர்கள் அனைவரும் ரியாத்துக்கு 308 கி.மீ தெற்கே அமைந்துள்ள அல் ஹரிக் என்ற சிறிய நகரத்தைச் சேர்ந்தவர்கள்.

இந்த விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. அல் ஹெய்ர் – அல் ஹரிக் சாலையின் கட்டுமானப்பணிகள் இன்னும் முடிவடையாத நிலையில் தற்போது ஒரே ஒரு பாதைதான் உபயோகத்தில் உள்ளது என சவூதி இணைய செய்தி நிறுவனமான Sabq தெரிவித்துள்ளது. நகரத்தின் குடியிருப்பாளர்கள் சவூதி போக்குவரத்து அமைச்சகத்திடம் இரண்டு வழித்தடங்களை அமைத்து, நவீன பொறியியல் ஆய்வுகளை மேற்கொண்டு அதனடிப்படையில் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆண்டுக்கு 526,000 சாலை விபத்துகள்

“Friends of the Red Crescent Committee யின் தரவுகளின்படி சவூதி அரேபியாவில் ஆண்டு ஒன்றுக்கு 526000 சாலை விபத்துகள் பதிவாகின்றன. இந்த விபத்துகளில் மரணமடைபவர்களின் எண்ணிக்கை 17 ஆக இருக்கிறது.” என கமிட்டியின் தலைவர் அஹ்மத் அல் ஷைகா தெரிவித்துள்ளார்.

“சாலை விபத்துகளுக்கு மட்டும் சவூதியில் ஆண்டுக்கு மொத்தம் 21 பில்லியன் சவூதி ரியால்கள் செலவிடப்படுகிறது. உலக அளவில் சாலை விபத்துக்களினால் அதிக இறப்பு விகிதங்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் சவூதி அரேபியா 23 வது இடத்தில் உள்ளது. அரபு நாடுகளைப் பொறுத்தவரையில் இரண்டாவது இடத்தில் உள்ளது.” என்று அல் ஷைகா கூறினார்.

மேலும், மக்களுக்குப் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் இந்த விகிதத்தை 15% வரை குறைக்க முடியும் என நம்புவதாக என்று அல் ஷைகா கூறினார்

Related posts