mosque
Image Credits- Gulf News

சவூதியில் மீண்டும் மூடப்பட்ட 71 மசூதிகள்..!

சவூதியில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தடுப்பு நெறிமுறைகளை பல மசூதிகளில் சரிவர கடைபிடிக்காததால் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. இதையடுத்து பல்வேறு பகுதிகளில் உள்ள 71 மசூதிகளுக்கு இஸ்லாமிய விவகாரங்கள் அமைச்சகம் தற்காலிக தடை விதித்துள்ளது.

இதுகுறித்து இஸ்லாமிய விவகார அமைச்சர் டாக்டர் அப்துல் லத்தீப் அல்-ஷேக் கூறுகையில், கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நெறிமுறைகளை சில வழிபாட்டாளர்கள் கடைபிடிக்காததே மசூதிகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதற்கு காரணம் என்று சுட்டிக்காட்டினார். இதனடிப்படையிலேயே மசூதிகள் மூடப்படுவதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.

மேலும் மசூதிகள் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் இச்சூழ்நிலையில் மசூதிகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறுவதாகவும் அல் ஷேக் தெரிவித்தார்.

கடந்த மே 31, ஞாயிற்றுக்கிழமையன்று மக்காவைத் தவிர, சவுதி அரேபியா முழுவதிலும் உள்ள 900,000 க்கும் அதிகமான மசூதிகள் படிப்படியாக மீண்டும் திறக்கப்பட்ட பின்னர், இதுபோன்ற பல மசூதிகள் ஒன்றுபோல் மீண்டும் மூடப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Gulf News

Related posts