-airindia-
Image Credit : DNA India

வந்தே பாரத் மிஷன் நான்காம் கட்டம் – சென்னை உட்பட 5 நகரங்களுக்கு கூடுதல் விமானங்கள் அறிவிப்பு..!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வெளி நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக இந்திய அரசால் ‘வந்தே பாரத் மிஷன்’ வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது இந்த மிஷனானது நான்காம் கட்டமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

வந்தே பாரத் மிஷனின் நான்காம் கட்டமாக சவூதியிலிருந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. அதில் ஏற்கெனவே திருச்சிக்கு இரண்டு விமானங்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பிறகு  கூடுதலாக சென்னைக்கு நான்கு விமானங்கள் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில்,  இன்று வெளியாகியுள்ள அறிவிப்பில் சவூதியில் இருந்து இந்தியாவிற்கு மேலும் 5 கூடுதல் விமானங்களை இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில்  தமாமில் இருந்து சென்னைக்கு ஜூலை 28 ஆம் தேதி ஒரு விமானம் இயக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related posts

error: Alert: Content is protected !!