cruel
Image Credits- Gulf News

சவூதியில் மனைவிக்கு மொட்டை அடித்து உடல் ரீதியாக சித்ரவதை செய்த கொடூர கணவர்..!

சவூதியின் தென்மேற்கு பகுதியான ஜீசானில் வசிக்கும் ஆசிய வெளிநாட்டவர் ஒருவர், தனது மனைவியை உடல் ரீதியாக பல துன்பங்களுக்கு உள்ளாக்கியதோடு, அவளை வீட்டை விட்டு வெளியே துரத்தியுள்ளான். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சவூதி போலீசார் அந்த கொடூர அரக்கனை கைது செய்தனர்.

இந்த தம்பதியினருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று அவர் தன் மனைவியின் தலைமுடியை மொட்டை அடித்து, கொதிக்கும் நீரை அவளது உடலில் ஊற்றி கொடுமைப்படுத்தியுள்ளான். அதன்பின்பு அந்த கொடூரன் அவளை வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளான்.

உடலில் பலத்த தீக்காயங்கள் மற்றும் பல்வேறு காயங்கள் ஏற்பட்டுள்ள அந்த பெண், தங்குமிடம் இல்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

இச்செயலை புரிந்த கொடூர அரக்கனை கைது செய்த போலீசார், அவனை பொது வழக்கு விசாரணைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த வாரம், நாட்டின் மனித உரிமைகள் ஆணையம் குடும்ப வன்முறை தொடர்பான எந்தவொரு பிரச்சனைகளையும் தாமாக முன்வந்து தெரிவிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது. அவ்வாறு தெரிவிக்கப்படும் பிரச்சனைகள் தீவிரமாக இருக்கும் பட்சத்தில் காவல்துறையினர் தலையீடு இருக்கும் என்று மனித உரிமைகள் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் எச்சரித்துள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில், சவூதி அரேபியா குடும்பம் சார்ந்த வன்முறைக்கு (domestic violence) எதிரான கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: Gulf News

Related posts