drive
Image Credits- Riyadh Xpress

சவூதி அரேபியாவில் கோவிட் -19 டிரைவ்-த்ரூ மையங்களில் எவ்வாறு முன்பதிவு பெறுவது..?

சவூதி அரேபியாவில் கொரோனா வைரஸ் டிரைவ்-த்ரூ பரிசோதனையின் (Drive-Thru test) முன்பதிவானது செஹாட்டி (Sehhaty) திட்டம் வழியாக தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் சவூதி அரேபியாவில் உள்ளவர்கள் கொரோனா வைரஸ் பரிசோதனைக்கான முன்பதிவை பெற முடியும்.

இது டிரைவ்-த்ரூ பரிசோதனை என்பதால் கண்டிப்பாக வாகனம் இருந்தால் மட்டுமே பரிசோதனை செய்ய முடியும். உங்களிடம் வாகனம் இல்லையென்றாலோ அல்லது முன்பதிவு பெற முடியாத பட்சத்திலோ நாம் முன்னரே பதிவிட்டிருந்த இந்த லிங்கை பயன்படுத்தி உங்கள் பகுதியிலுள்ள கிளினிக்குகளை கண்டறிந்து பரிசோதனை செய்து கொள்ளலாம்.

சவூதி அரேபியாவில் வசிக்கும் குடிமக்கள், குடியிருப்பாளர் அல்லது தனிப்பட்ட நபர்கள் செஹாட்டி திட்டத்தின் மூலம் முன்பதிவை பெற முடியும்.

இதற்காக கீழ்கண்ட ஏதேனும் ஒரு அடையாள ஆவணத்தை பயன்படுத்தி முன்பதிவு பெற்றுக்கொள்ளலாம்.

  • தேசிய ஐடி (National ID)
  • இகாமா (Iqama) – ரெசிடெண்ட் கார்டு
  • ஜி.சி.சி ஐடி (GCC ID)
  • பார்டர் நம்பர் (Border Number) – இது உங்களின் முத்திரையிடப்பட்ட தற்காலிக சுற்றுலா விசா அல்லது பிற விசிட் விசாக்களில் காணப்படும்.

லிங்க்: https://sehhaty-mass.global.ssl.fastly.net/

Related posts