bridge
Image Credits- Gulf News

சவூதி – பஹ்ரைன் இடையிலான பாலம் மீண்டும் திறக்கப்படுவதில் தாமதம்..!

சவூதி அரேபியா மற்றும் பஹ்ரைனை இணைக்கும் கிங் ஃபஹத் காஸ்வே பாலத்தை ஜூன் 10, புதன்கிழமை (இன்று) மீண்டும் திறக்கப்படும் என்ற செய்தியை கிங் ஃபஹத் காஸ்வே அதிகாரிகள் (King Fahd Causeway Authority) முற்றிலுமாக மறுத்துள்ளதோடு, தற்போது பாலம் திறக்கப்படும் தேதி எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்பதையும் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் உறுதிபடுத்தியுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலை எதிர்த்து போராடுவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, கடந்த மார்ச் 7 ஆம் தேதியன்று இந்த கிங் ஃபஹத் காஸ்வே மூடப்பட்டது. இறுதியாக இந்த பாலம் மூடப்படுவதற்கு முன்பு பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைத்திலிருந்த சவூதி குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் இப்பாலம் வழியாக சவூதிக்கு அழைத்து வரப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1986 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த பாலமானது 25 கிலோ மீட்டர் நீளத்தை கொண்டது ஆகும்.

Source: Gulf News

Related posts

error: Alert: Content is protected !!