Saudi Mosque

மசூதிகளில் மட்டுமே ஈத் தொழுகை – சவூதி இஸ்லாமிய விவகாரத் துறை !

சவூதியின் இஸ்லாமிய விவகாரம், துவா மற்றும் வழிகாட்டல் துறை அமைச்சர் ஷேக் அப்துல்லதீப் அல்-ஷேக் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ஈத் அல் ஆதா (ஹஜ் பெருநாள் தொழுகை) தொழுகைகள் மசூதிகளில் மட்டுமே நடத்தப்படும் என்றும் எந்த திறந்தவெளி மைதானத்திலும் நடக்காது எனவும் அறிவித்துள்ளார்.

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள அமைச்சகத்தின் கிளைகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், “பெரிய மசூதிகள் மற்றும் கூடுதல் மசூதிகளில்தான் ஈத் தொழுகை நடத்தப்பட வேண்டும். அங்கு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நடைமுறையில் உள்ள சூழலைக் கருத்தில் கொண்டு திறந்தவெளி மைதானங்களில் எந்த ஈத் பிரார்த்தனையும் செய்யப்பட மாட்டாது.” என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தகுந்த அதிகாரிகளால் வழங்கப்படும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் நோய்த்தடுப்பு நெறிமுறைகளையும் செயல்படுத்த ஒத்துழைக்குமாறு அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.

Related posts