ஈத் அல் பித்ர் பண்டிகைத் தேதி அறிவிக்கப்பட்டது!

சவூதி அரேபியாவில் இன்று (வெள்ளிக்கிழமை) ஷவ்வால் பிறை தென்படாததால், ஈத் அல் பித்ர் பண்டிகை வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 24) கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மே 23 (சனிக்கிழமை) அன்று பிறை தெரியும் என கணிக்கப்பட்டுள்ளது.

இன்று காணொளி காட்சி மூலமாக பிறை பார்க்கும் கமிட்டியுடன் அமீரக அதிகாரிகள் உரையாடல் நடத்தினர் . இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதிலும் உள்ள மசூதிகள் மூடப்பட்டுள்ளதால் இந்த வருட ஈத் அல் பித்ர் தொழுகையை மக்கள் வீட்டிலேயே மேற்கொள்ளும்படி அறிவுத்தப்பட்டுள்ளது. மேலும் மக்கள் கூட்டமாக ஒன்றிணைய வேண்டாம் எனவும், சமூக விலகலைக் கடைபிடிக்கும்படியும் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

Related posts

error: Alert: Content is protected !!