vande
Image Credits- Riyadh Xpress

தாயகம் திரும்பும் விமான தேதியில் மாற்றம்..!

கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை ‘வந்தே பாரத்’ திட்டத்தின் மூலம் தாயகத்திற்கு திருப்பி அனுப்பும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதையடுத்து தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் இரண்டாம் கட்ட வந்தே பாரத் மிஷனில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இரண்டு விமானங்களின் புறப்படும் தேதியில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

தேதி மாறுதலுக்குட்பட்ட விமானங்களின் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விமான எண் விமானம் புறப்படுமிடம் இந்தியாவில் சென்றடையுமிடம் அசல் தேதி தற்போது மாற்றப்பட்டுள்ள தேதி
AI 0924 ரியாத் கொச்சி 14 ஜூன் 2020 17 ஜூன் 2020
AI 1942 தமாம் திருவனந்தபுரம் 15 ஜூன் 2020 18 ஜூன் 2020

இது சம்மந்தமாக கடந்த ஜூன் 4, 2020 அன்று, ரியாத்தில் உள்ள இந்திய தூதரக செய்தி குறிப்பில் தெரிவித்திருந்தது போலவே ஏற்கனவே திட்டமிடப்பட்ட மீதமுள்ள விமானங்களில் எவ்வித மாற்றமுமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts