flight
Image Credits- Gulf News

சவூதியிலிருந்து தமிழகம் செல்லவிருக்கும் தனி விமானங்கள். உடனே பதிவு செய்யுங்கள்.!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம் காதர் மொகிதீன் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், பொதுச்செயலாளர் சட்டமன்ற சங்கநாதம் கடையநல்லூர் சட்டமன்றத் உறுப்பினர் K.A.M.முகமது அபுபக்கர் அவர்களின் ஆலோசனைப்படி, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கொறடா இராமநாதபுரம் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் கா.நவாஸ்கனி அவர்களின் பேருதவியுடன் சவூதி அரேபியாவில் இருந்து தமிழகத்திற்கு இரண்டு தனி விமானங்கள்(Chartered Flights) இயக்கப்பட இருக்கிறது.

இந்த இரண்டு விமானங்களில், ஒன்று ரியத்திலிருந்து திருச்சிக்கும் மற்றொன்று ஜித்தாவிலிருந்து திருச்சிக்கும் செல்ல இருக்கிறது. இந்த விமான சேவையை செயல்படுத்துவதற்காக முழுவீச்சில் பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே, விமான பயணத்தேதி விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாருக்கு முன்னுரிமை:

இத்திட்டத்தின் மூலம் வயதானவர்கள், கர்ப்பினிப் பெண்கள், அவசர மருத்துவ உதவி தேவைப்படுவோர் மற்றும் விசா காலாவதியாகும் நிலையில் எக்ஸிட் (Exit) அடித்து (தேதி காலாவதி நெருங்கும்) வெளியேற வேண்டியவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே இந்த விமானச் சேவை தேவைப்படும் தமிழர்கள் உடனடியாக இந்த லிங்கை கிளிக் செய்து அதனுள் இருக்கும் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் ஒரு படிவத்தில் ஒருவரின் தகவல் மட்டுமே பூர்த்தி செய்ய முடியும். அவ்வாறு பூர்த்தி செய்ய விரும்புவோர் கீழ்கண்ட தகவல்களை நிரப்ப வேண்டும்.

  • ஜித்தாவிலிருந்து திருச்சி செல்ல விரும்புகிறீர்களா? அல்லது ரியாத்திலிருந்து திருச்சி செல்ல விரும்புகிறீர்களா?
  • தங்களது பாஸ்போர்ட்டில் உள்ள பெயர்
  • வயது
  • பிறந்த தேதி
  • பாலினம்
  • பாஸ்போர்ட் எண்
  • எதற்காக இந்தியா செல்ல விரும்பகிறீர்கள்
  • சவூதியிலுள்ள தொடர்பு எண்
  • இந்தியாவிலுள்ள தொடர்பு எண்
  • இந்தியாவிலுள்ள தங்களது முகவரி
  • இ-மெயில் முகவரி
  • கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொண்டுள்ளீர்களா ? ஆம் என்றால் அது குறித்த தகவல்கள் போன்றவற்றை குறிப்பிட வேண்டும்.
  • அதுமட்டுமின்றி உங்களுடன் உங்கள் குடும்ப உறுப்பினர் யாரேனும் பயணிக்க விரும்பினால் அவர்களின் தகவல்களையும் இணைத்திட வேண்டும்.

மேலும், இந்த தனி விமான சேவை தொடர்பாக தகவல் அளிப்பதற்காக பிரத்தியேகமாக ஒரு வாட்ஸ் ஆப் குரூப் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.

குரூப்பில் இணைய – https://chat.whatsapp.com/FsdQXlwPVpb1Mvyz8nzNUC

மேலும் தொடர்புக்கு: இ-மெயில் – [email protected]

Related posts