quarantine
Image Credits- Riyadh Xpress

சவூதிக்குள் வருவோருக்கு வீட்டு தனிமைப்படுத்துதல் நிச்சயம்..!

சவூதிக்குள் வருகை புரிவோர்கள் கண்டிப்பாக வீட்டு தனிமைப்படுத்தலுக்கு (Home Quarantine) உட்படுத்தப்படுவார்கள் என்று சுகாதார அமைச்சக அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது. இது விமான நிலையம் வழியாக சவூதி அரேபியாவிற்குள் வரும் சவூதி குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் அனைவருக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டிற்குள் வந்த பிறகு எத்தனை நாட்கள் வீட்டு தனிமைப்படுத்துதலில் இருக்கவேண்டும் என்பது அதிகாரிகளின் ஆலோசனையின் படி அமையும். பெரும்பாலும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள், ஆனால் படிவத்தில் எத்தனை நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.

பயணிகள் சவூதிக்குள் வருவதற்கு ஒரு உறுதிமொழி படிவத்தை நிரப்ப வேண்டும். அந்த படிவத்தில் நாட்டிற்குள் வந்ததும் கட்டாய வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த முயற்சியின் மூலம் சமூக பரவலானது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதும் கொரோனா வைரஸ் தொற்று வெளியிலிருந்து சவூதிக்குள் வருவோரால் அதிகரிக்கவில்லை என்பதை உறுதி செய்ய முடியும்.

இவ்விதியை கடைபிடிக்க தவறுபவர்கள் அல்லது வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்த மறுப்பவர்கள் சட்டப்படியான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் மற்ற நாடுகளும் இதே போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செயல்படுத்தியுள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுகாதார அமைச்சகம் சவூதிக்கு வெளியில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே சுகாதார பரிசோதனைகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளது. மேலும் பயணிகள் தங்களுடைய உறுதிமொழி படிவத்தை நிரப்பிய பின்னர் வீட்டு தனிமைப்படுத்தலை மேற்கொள்ள தங்கள் வீடுகளுக்கு செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts