Indian Embassy
Image Credit : Saudi Expatriates

சவூதி : இந்திய தூதரக சேவைகள் தற்காலிகமாக குறைக்கப்படுவதாக அறிவிப்பு – காரணம் என்ன?

சவூதியில் உள்ள இந்திய தூதரக மற்றும் துணைத் தூதரகங்களில் கொரோனா முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் சில நாட்களுக்கு தங்களது தூதரக சேவைகளை குறைவான அளவிலேயே வழங்க இருப்பதாக தூதரக/துணைத் தூதரகங்கள் ட்விட்டர் மூலமாக தெரிவித்துள்ளன.

பாஸ்போர்ட் சேவைகளை மேற்கொண்டுவரும் விஎஃப்எஸ் குளோபல் (VFS Global) நிறுவனத்தின் பணிகள் தொடர்ந்து நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்கூட்டியே அனுமதி பெற்று விண்ணப்பதாரர்கள் இந்த சேவை மையத்திற்கு சென்று தங்களுக்கான சேவைகளைப் பெறலாம்.

தூதரகத்திடம் இருந்து அவசர உதவிகள் தேவைப்படுவோர் தூதரகத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு ([email protected]) தகுந்த ஆவணங்கள் மற்றும் முகவரியுடன் மின்னஞ்சல் அனுப்பலாம். விரைவில் பழையபடி தூதரகம் பணிக்குத் திரும்பும் என அந்த ட்விட்டர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அமைதிகாக்குமாறும், தூதரகம் இந்திய குடிமக்களுக்கு வேண்டிய உதவிகளை தொடர்ந்து செய்யும் என ட்விட்டர் வழியாக தெரிவித்துள்ளது தூதரகம்.

அதேபோல, ஜித்தாவில் உள்ள துணைத் தூதரகத்திடம் இருந்து அவசர உதவிகள் தேவைப்படுவோர் துணைத் தூதரகத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு ([email protected]) தகுந்த ஆவணங்கள் மற்றும் முகவரியுடன் மின்னஞ்சல் அனுப்புமாறு துணைத் தூதரகம் டிவிட்டரில் தெரிவித்துள்ளது.

 

Related posts

error: Alert: Content is protected !!