clinic
Image Credits- Riyadh Xpress

கொரோனா வைரஸ் பரிசோதனைக்கான 24/7 டாட்மேன் கிளினிக்குகளின் பட்டியல்..! முன் அனுமதி தேவை இல்லை..!

சவூதியில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கான டாட்மேன் கிளினிக்குகளின் பட்டியலை சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த கிளினிக்குகள் 24/7 மணி நேரமும் இயங்கும் என்றும் இதற்காக எந்தவித முன் அனுமதியும் பெற தேவை இல்லை என்றும் சுகாதார அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ சேனலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கிளினிக்குகளுக்கு யாரெல்லாம் செல்லலாம்?

கொரோனா வைரஸின் அறிகுறிகளைக் கொண்ட எவரும், அதாவது அதிக காய்ச்சல், மூச்சுத் திணறல் அல்லது இருமல் போன்ற அறிகுறியுடைய குடிமக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் விசா விதி மீறல் புரிந்தவர்கள் அல்லது ஓவர்ஸ்டேயில் தங்கியிருப்பவர்கள் உட்பட அனைவரும் இங்கு பரிசோதனை செய்து கொள்ளலாம்.

முன் பதிவு அவசியமா?

எந்தவொரு நோயாளிக்கும் முன் பதிவு தேவையில்லை, அவர்கள் நேரடியாக சென்று பார்வையிடலாம்.

பார்வையிட வேண்டிய நேரங்கள் என்ன?

கிளினிக்குகள் 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருக்கும்.

பிற கொரோனா வைரஸ் பரிசோதனை மையங்களில் முன்பதிவு கிடைக்கவில்லை என்று கவலைப்படுபவர்களுக்கு இந்த டாட்மேன் கிளினிக்குகள் உதவிகரமாக இருக்கும். டாட்மேன் என்றால் ‘ஓய்வு உறுதி’(Rest Assured) என்று பொருள்.

சவூதி சுகாதார அமைச்சகத்தினால் வெளியிடப்பட்ட கீழ்கண்ட பட்டியலானது பின்வரும் நகரங்களில் செயல்படுகிறது.

* ரியாத் (1-6)
* அல்-அஹ்ஸா (7)
* அல் காசிம் (8-18)
* மக்கா (19-23)
* ஜித்தா (24-28)
மற்றும் மதீனா (29-31).

இந்த பட்டியலில் கொடுக்கப்பட்டிருக்கும் நகரத்தின் அடைப்பு குறிக்குள் (Bracket) உள்ள எண்களை கிளிக் செய்வதன் மூலம் பரிசோதனை மையத்தின் இருப்பிடத்தை கூகுள் மேப் உதவியால் பார்க்க முடியும்.

 

Related posts