Precautionary measures

சவூதியில் மீண்டும் இயங்கத் தொடங்கிய முடி திருத்தகங்கள் மற்றும் அழகு நிலையங்கள் – விதிமுறைகளை வெளியிட்டது அமைச்சகம்

சவூதியில் இன்று முதல் ஆண்களுக்கான முடி திருத்தகங்கள் மற்றும் பெண்களுக்கான அழகு நிலையங்கள் ஊரடங்கிற்குப் பிறகு மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளதையடுத்து, சவூதி நகர்ப்புற மற்றும் ஊரக விவகாரத் துறை அமைச்சகம் அதற்கான நெறிமுறைகளை வெளியிட்டுள்ளதாக சவூதி பத்திரிகை முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

நெறிமுறைகளின்படி வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் நிபந்தனைகளைக் கீழே காணலாம்.

  • அதிக அளவில் வாடிக்கையாளர்கள் கூடுவதைத் தவிர்க்க வேண்டும்.
  • வாடிக்கையாளர்கள் தங்கள் முறை வரும் வரையில் சமூக இடைவெளியைக் கடைபிடித்து கடைகளுக்கு வெளியே காத்திருக்க வேண்டும்.
  • பணியாளர்கள் சோப்பு மற்றும் வெதுவெதுப்பான நீர் கொண்டு அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும்.
  • பணியாளர்கள் கட்டாயமாக முகக்கவசம், கையுறைகள், முகமூடிகள், கண் கண்ணாடிகள், முடி திருத்துநர் உபயோகிக்கும் லேப் கோட், கழுத்துப் பட்டை ஆகிய பாதுகாப்பு உபகரணங்களை உபயோகிக்க வேண்டும்.
  • கடைகளைத் திறக்கும் முன்னரே தளங்களை கிருமி நாசினி செய்து சுத்தம் செய்வதோடு, ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறையும் தொடர்ந்து சுத்தம் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும்.
  • ஓய்வறைகளில் கை கழுவும் உபகரணங்களான சோப்புகள், சுடுதண்ணீர் ஆகியவை போதுமான அளவு கிடைக்கின்றதா என்பதைத் தொடர்ந்து உறுதி செய்ய வேண்டும். இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தவறாமல் தினமும் செய்து வர வேண்டும்.
  • ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் தனித்தனியே புதிய உபகரணங்களைப் பணியாளர்கள் பயன்படுத்த வேண்டும். சவரம் செய்வதற்கான உபகரணங்களை வாடிக்கையாளர்கள் தாங்களே கொண்டு வர வேண்டும்.
  • பெண்கள் அழகு நிலையங்கள் வாடிக்கையாளர்கள் வீட்டிலேயே தங்கள் கூந்தலைக்  கழுவி வருவதன் அவசியத்தை உணர்த்த வேண்டும்.
  • வாடிக்கையாளர்களுடன் நேருக்கு நேர் தொடர்பு கொள்வதை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும்.
  • வருகையைப் பதிவு செய்வதற்கு கைரேகை சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து மாற்று வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
  • வாடிக்கையாளர்களின் பெயர் மற்றும் கைபேசி எண் குறித்த தகவல்களைக் கட்டாயம் வாங்கி வைக்க வேண்டும்.
  • வாடிக்கையாளர்களின் கூந்தல் அல்லது உடலைச் சுத்தம் செய்யும் பணியாளர்கள் முகக்கவசம் மற்றும் கண்ணாடி அணிந்திருந்தாள் அவசியம்.
  • அனைத்து வகையான மசாஜ்கள் மற்றும் நீராவிக் குளியல்களுக்கு அனுமதி இல்லை.

Related posts