visa
Image Credits- Gulf News

கொரோனா தாக்கம் முடிவுக்கு வரும்வரை வெளிநாடுகளில் வசிக்கும் சவூதி குடியிருப்பாளர்கள் சவூதிக்குள் நுழைவதற்கான தடை தொடரும் – ஜவாசத் விளக்கம்.!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்கம் முழுவதுமாக முடிவடையும் வரை வெளிநாடுகளில் வசிக்கும் சவூதி குடியிருப்பாளர்கள் சவூதிக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று சவூதி பாஸ்போர்ட் பொது இயக்குநரகம் (ஜவாசத்) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை(நேற்று) அறிவித்துள்ளது.

சவூதி குடியிருப்பாளர் ஒருவர் வெளியேறும் விசா(exit visa) மற்றும் ரிட்டன் விசா (return visa) வைத்திருக்கும் நிலையில் தனது நுழைவு விசா (entry visa) காலாவதி ஆகுவதற்குள் சவூதிக்குள் நுழைய முடியுமா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் கூறும் வண்ணம் இந்த அறிவிப்பை சவூதி பாஸ்போர்ட் பொது இயக்குநரகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அதில், “வணக்கம், கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்கம் முடிவடையும் வரை நீங்கள் சவூதிக்குள் திரும்ப அனுமதிக்கப்பட மாட்டீர்கள் என்றும், திரும்ப அனுமதிப்பதற்கான முடிவானது அதிகாரப்பூர்வமாக பின்னர் அறிவிக்கப்படும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் “சவூதி குடியிருப்பாளர் ஒருவர் சவூதிக்கு வெளியே இருக்கும் பட்சத்தில், கொரோனா வைரஸ் தொற்று நோயின் தாக்கம் முடிவடைந்த பின்னர் வெளியேறும் விசா(exit visa) மற்றும் ரிட்டன் விசாவை (return visa) நீட்டிப்பதற்கான வழிமுறை அதிகாரப்பூர்வ சேனல்கள் மூலம் அறிவிக்கப்படும்” என்று இயக்குநரகம் தெளிவுபடுத்தியுள்ளது.

இதுகுறித்த புதிய முடிவுகள் அல்லது அறிவுறுத்தல்கள் அதிகாரப்பூர்வ சேனல்கள் மூலம் அறிவிக்கப்படும் என்று இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

Source: Gulf News

Related posts