a_man_walks_at_a_petrol_station_in_riyadh_saudi_arabia_october_8_2017._reuters
Image Credit : aawsat

சவூதியில் பெட்ரோல் விலை அதிகரிப்பு – காரணம் என்ன?

சவூதி அரசு விதித்துள்ள 15 சதவிகித வாட் வரியின் காரணமாக ஜுலை 1 முதல் ஜூலை 10 ஆம் தேதிவரையில் பெட்ரோல் மற்றும் பிற எரிபொருட்களின் விலையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக சவூதி அராம்கோ அறிவித்துள்ளது.

கொரோனா நோய்ப்பரவல் குறித்த அச்சம் எரிபொருள் விலையின் ஏற்ற இறக்கத்திற்கு காரணமாக இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

ஜூலை 1 முதல் 10 வரையிலான பெட்ரோல் விலை நிலவரம் (சவூதி ரியால்/லிட்டர்)

பெட்ரோல் 91

முன்பு : ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 0.90 ரியால்கள்

தற்போது : ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 0.98 ரியால்கள்

பெட்ரோல் 95

முன்பு : ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 1.08 ரியால்கள்

தற்போது : ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 1.18 ரியால்கள்

டீசல்

ஒரு லிட்டர் டீசலின் விலை 0.52 ரியால்கள்

மண்ணெண்ணெய்

ஒரு லிட்டர் மண்ணெண்ணெயின் விலை 0.70 ரியால்கள்

LPG

ஒரு லிட்டர் LPG யின் விலை 0.75 ரியால்கள்.

அரசாங்க விதிமுறைகளின் அடிப்படையில் நீர் மற்றும் எரிபொருட்களின் விலையில் மாற்றம் கொண்டுவர அரசு ஒப்புதல் அளித்ததால் இந்த விலையேற்றம் நடைமுறைக்கு வந்திருக்கிறது.

சவூதியிலிருந்து உலக சந்தைக்கு விற்பனை செய்யப்படும் பெட்ரோல் மற்றும் எரிபொருளின் விலையில் ஏற்படும் மாற்றமானது உள்ளூர் பெட்ரோல் மற்றும் எரிபொருளின் விலையை பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

error: Alert: Content is protected !!