mask
Image Credits- Saudi Gazette

ரியாத் விமான நிலையத்தில் PPE விற்பனை இயந்திரங்கள் அறிமுகம்..!

ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில் முககவசங்கள் மற்றும் சானிடைசர்கள் உள்ளிட்ட தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் (PPE) வழங்கும் தானியங்கி விற்பனை இயந்திரங்களை விமான நிலைய அதிகாரிகள் நிறுவியுள்ளனர். மேலும் விமான நிலையம் தனது ட்விட்டர் பதிவில், உள்நாட்டு விமான முனையத்தின்(terminal) லவுஞ்ச்(lounge) 5 இல் செயல்படும் இந்த தானியங்கி இயந்திரங்களின் படங்களை வெளியிட்டுள்ளது.

இதற்கு முன்னர் கொரோனா வைரஸின் பரவலைத் தடுக்கும் கடுமையான சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தடுப்பு நெறிமுறைகளுடன் சிவில் ஏவியேஷன் பொது ஆணையம் மே 31 முதல் உள்நாட்டு விமான சேவைகளை மீண்டும் தொடங்க அனுமதி அளித்தது. இதனை தொடர்ந்து ஜூன் மாத தொடக்கத்தில் உள்நாட்டு விமான முனையங்கள் மீண்டும் திறக்கபட்டது குறிப்பிடத்தக்கது.

machine
Image Credits- Saudi Gazette

Related posts