prosecution
Image Credits- Riyadh Xpress

சவூதியின் அதிகரப்பூர்வ ரகசிய தகவலை வெளியிட்டால் என்ன தண்டனை தெரியுமா..?

சவூதி அரேபியாவின் அதிகாரப்பூர்வ ரகசிய தகவல்களைப் (Confidential Information) பகிர்வது அல்லது வெளிப்படுத்துவது தொடர்பான குற்றத்திற்கு 1 மில்லியன் சவூதி ரியால் (SAR) அபராதம் விதிக்கப்படுவதோடு, 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்படுள்ளது. இந்த செய்தியானது பொது வழக்கு விசாரணையின் அதிகாரப்பூர்வ சேனல்களில் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் ரகசிய ஆவணங்கள் மற்றும் அதன் தகவல்களை வெளியிடுவது அல்லது இவற்றில் ஏதேனும் ஒன்றை பகிர்வது தடைசெய்யப்பட்டுள்ளது. இவ்வாறான செயல்கள் மிகப்பெரிய குற்றமாக கருதப்படுவதோடு, இத்தகைய தகவல்களை வெளியிடும் தனிநபர்கள் கைது செய்யப்படுவார்கள். மேலும் அதிகாரப்பூர்வ ரகசிய தகவல்களை வெளியிடுவதை சவூதி அரேபியா ஒரு போதும் பொறுத்துக் கொள்ளாது என்று அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் எச்சரித்துள்ளது.

Related posts

error: Alert: Content is protected !!