saudi
Image Credit : Argaam

சவூதியில் தனியார் துறைகளில் பணி புரியும் வெளிநாட்டவர்களுக்கு சிறப்புக் காப்பீட்டுத் திட்டம்..!

தனியார் துறைகளில் பணி புரியும் சவூதி அல்லாத தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் நன்மைகளைப் பாதுகாப்பதற்காக ஒரு காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த சவூதி அமைச்சரவை சமீபத்தில் அனுமதி அளித்துள்ளதாக சவூதி இணைய நாளிதழான சப்க் (Sabq) தெரிவித்துள்ளது.

இந்தக் காப்பீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான செலவுகளை அரசு ஏற்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இந்தத் திட்டம் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் சவூதி அல்லாத தொழிலார்களின் பாதுகாப்பை இலக்காகக் கொண்டுள்ளது. தொழில் நிறுவனம் முடங்கும்போது தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், நிறுவனம் செயல்பட முடியாத நிலைக்குச் செல்லும்போது தொழிலாளர்கள் சந்திக்கும் அபாயங்களில் இருந்து அவர்களைக் காக்கவும் இந்தக் காப்பீட்டுத் திட்டம் உதவும்.” என்று மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் அகமது அல் ரஜ்ஹி (Ahmed Al Rajhi) கூறியுள்ளார்.

“சவூதி பொருளாதாரத்தைப் பெருக்குவதிலும், அதிக அளவில் வேலை வாய்ப்புகளை வழங்குவதிலும் தனியார் துறை நிறுவனங்கள் தங்கள் பங்களிப்புகளை மேம்படுத்துவதற்காக, அவற்றிற்கு சவூதி அளிக்கும் முக்கியத்துவத்தின் அடையாளமாக இந்தக் காப்பீட்டுத் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.” என்று அல் ரஜ்ஹி குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம், நிதி அமைச்சகம் மற்றும் சவூதி அரேபிய நாணய முகமை (SAMA) ஆகியவற்றின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய குழு ஒன்றை அமைப்பதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அந்தக் குழு கீழ்கண்ட பணிகளை மேற்கொள்ளும்,

  •  இந்தக் காப்பீட்டுத் திட்டத்தின் இலக்கான தனியார் துறை நிறுவனங்களில் பணி புரியும் சவூதி அல்லாத தொழிலாளர்களை வகைப்படுத்துதல்.
  • காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்தத் தேவையான கட்டுப்பாடுகள் மற்றும் வழிமுறைகளை உருவாக்குதல்.
  • காப்பீட்டு நிறுவனங்கள் கண்காணிப்பு சட்டத்தின்படி, காப்பீட்டுக் கொள்கையின் மதிப்பைத் தீர்மானித்தல்.

Related posts