saudi
Image Credits- Gulf News

சவூதியில் கொரோனா மருத்துவ அறிக்கை மோசடி செய்த மூவர் கைது..!

கொரோனா வைரஸ் தொடர்பான மருத்துவ ஆவணங்களை மோசடி செய்ததாக நஜ்ரனின் தெற்கு பகுதியில் இரண்டு ஏமன் நாட்டவர்கள் மற்றும் சவூதியைச் சேர்ந்த ஒருவர் சவூதி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சவூதி பத்திரிக்கை நிறுவனம் இன்று (புதன்கிழமை) தகவல் வெளியிட்டுள்ளது.

விசாரணையின் போது இவ்விரு ஏமன் நாட்டவர்களும் தங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று கூறி போலி மருந்துவ அறிக்கைகளை பயன்படுத்தியதாக ஒப்புக் கொண்டுள்ளனர். இதனடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக நஜ்ரான் காவல்துறை செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் அப்துல்லா அல் அஸ்வி தெரிவித்தார்.

மேலும் அவர் கூறும்போது, இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட சவூதி நாட்டைச் சேர்ந்த 30 வயதுடைய நபர் பணத்திற்கு ஆசைப்பட்டு இந்த மோசடியில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்ததையடுத்து அவரும் கைது செய்யப்பட்டார் என்று கூறினார்.

அதுமட்டுமின்றி இவர்களுக்கு எதிராக சட்டப்படி நடைவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றும் அஸ்வி தெரிவித்தார்.

சவூதியில் சமீபத்திய வாரங்களில் COVID-19 பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான விதிமுறைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மீறுவோர் மீது சவூதி அதிகாரிகள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

சவூதி அரேபியா ஆபத்தான கொரோனா வைரஸிற்கான பரிசோதனையை விரிவுபடுத்தியுள்ளது. மேலும் இந்த வார தொடக்கத்தில், சுகாதார அமைச்சகம் வைரஸ் தொற்றின் அறிகுறிகளை கொண்டவர்களை பரிசோதிக்க 24/7 மணிநேரமும் செயல்படும் கிளினிக்குகளைத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

Source: Gulf News

Related posts

error: Alert: Content is protected !!