islam
Image Credits- Gulf News

அதிகரித்து வரும் இஸ்லாத்திற்கு எதிரான வெறுப்பு குறித்து கவலை தெரிவித்த சவூதி அரேபியா..!

உலகின் சில பகுதிகளில் இஸ்லாத்திற்கு எதிரான அச்சுறுத்தல் (Islamophobia) மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுக்கத்தக்க பேச்சுக்கள் அதிகரித்து வருவது குறித்து சவுதி அரேபியா கவலை தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரக நிரந்தர பிரதிநிதியான ஐ.நா தூதர் லானா ஸக்கி நுசீபே (Lana Zaki Nusseibeh) தலைமையிலான, நியூயார்க்கில் நடைபெற்ற இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (Organisation of Islamic Cooperation- OIC) தூதர்களின் காணொளி காட்சி கூட்டத்தின் (virtual meeting) போது, சவூதியின் நிரந்தர பிரதிநிதியான ஐ.நா தூதர் அப்துல்லா பின் யஹியா அல் முல்லாமி இதுகுறித்து கவலை தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதில், முஸ்லிம்களுக்கு எதிரான “பாகுபாடு மற்றும் இனவெறி நடைமுறைகளை” எதிர்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதோடு, இஸ்லாமியர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்பதை குறித்தும் கவலை தெரிவித்தார்.

கடந்த ஆண்டு புனித நகரான மக்காவில் நடத்தப்பட்ட இஸ்லாமிய உச்சிமாநாட்டின் முடிவில் வெளியிடப்பட்ட மக்கா பிரகடனத்தை மேற்கோள் காட்டிய அவர், இது கலாச்சார உரையாடல்களை (culture of dialogue) ஊக்குவிப்பதோடு, இஸ்லாத்தின் சகிப்புத்தன்மையை நிருபிக்கிறது என்று கூறினார்.

“சில நாடுகளில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைமுறையில் இருக்கும் பாகுபாடு மற்றும் இனவெறியை எதிர்த்து போராடும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) கீழ் உள்ள இஸ்லாமிய நாடுகளின் கொள்கைகளை சவூதி ஆதரிக்கிறது” என்று அல் முல்லாமி கூறினார்.

இதே கூட்டத்தில் உரையாற்றிய பாகிஸ்தானின் நிரந்தர பிரதிநிதியான, ஐ.நா தூதர் முனீர் அக்ரம் (Munir Akram) இஸ்லாத்திற்கு எதிரான விரிவாக்கம் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுக்கத்தக்க பேச்சு குறித்து மாநாட்டாளர்களுக்கு விளக்கினார். உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் முஸ்லீம் புலம்பெயர்ந்தோரை நாடு கடத்துமாறு ஐரோப்பாவில் சில தீவிர வலதுசாரிக் கட்சிகள் கடைப்பிடிக்கும் பாகுபாடு சம்பவங்களை அவர் சுட்டிக்காட்டினார்.

Source: Gulf News

Related posts

error: Alert: Content is protected !!