visa
Image Credits- Gulf News

சவூதி : வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களின் விசா மேலும் 3 மாதத்திற்கு செல்லுபடியாகும் – மன்னர் அறிவிப்பு..!

தற்போது வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களின் வெளியேறும் (Exit), நுழைவு (Entry) மற்றும் விசிட் விசாக்களின் செல்லுபடியாகும் காலக்கெடு மேலும் 3 மாத காலத்திற்கு இலவசமாக நீட்டிக்கப்படுவதாக சவூதி அரேபியா அறிவித்துள்ளது.

சவூதியின் காலாவதியான நுழைவு மற்றும் ரிட்டன் விசாக்களை கையில் வைத்திருந்து, தற்போது வெளிநாடுகளில் உள்ள வெளிநாடுகளைச் சேர்ந்த சவூதி தொழிலாளர்களின் காலாவதியான விசாக்கள் செல்லுபடியாகும் காலக்கெடுவை மேலும் 3 மாதத்திற்கு இலவசமாக நீட்டிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் (Salman Bin Abdul Aziz).

வெளிநாடுகளில் இருந்து விசிட்டிங் விசா மூலம் சவூதி வந்து, கொரோனா காரணமாக விமான சேவை ரத்து செய்யப்பட்டதால் நாடு திரும்ப இயலாதவர்களின் விசா காலக்கெடு 3 மாத காலம் நீட்டிக்கப்படுகிறது. அதேபோல, இறுதிகட்ட வெளியேறும் (Final Exit) விசாக்களை வைத்திருக்கும் வெளிநாடுகளைச் சேர்ந்த பணியாளர்களுடைய விசாவின் காலக்கெடு 3 மாதத்திற்கு நீட்டிக்கப்படுவதாக அரசானை தெளிவுபடுத்தியிருக்கிறது.

அரசின் இந்த விசா காலக்கெடு நீட்டிப்புத் திட்டம் தேவை ஏற்படின் எதிர்காலத்தில் மீண்டும் நீட்டிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவூதியின் வெளியேறும் மற்றும் ரிட்டன் விசாவை வைத்திருந்து வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் மக்கள் கொரோனா தாக்கம் முடிவுக்கு வரும்வரையில் மீண்டும் சவூதிக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சவூதியின் பாஸ்போர்ட் தலைமை இயக்குனரகமான ஜவாசத் சமீபத்தில் அறிவித்திருந்தது. இதுகுறித்து மேலும் அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Related posts