saudi_visa_
Image Credit : Gulfnews

சவூதி விசிட் விசா வைத்திருப்போருக்கு ஒரு நற்செய்தி – விசிட் விசாக்கள் மேலும் 3 மாத காலத்திற்கு செல்லுபடியாகும் என அரசு அறிவிப்பு..!

விசிட் விசாவில் சவூதி வந்து, தற்போது சவூதிக்குள் வசிப்போரின் விசா செல்லுபடியாகும் காலத்தினை மேலும் 3 மாத காலத்திற்கு நீட்டிப்பதாக சவூதி பாஸ்போர்ட் தலைமை இயக்குனரகம் அறிவித்திருக்கிறது.

தேசிய தகவல் மையத்துடன் இணைந்து, இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” சவூதிக்கு மற்றும் சவூதியிலிருந்து பயணம் மேற்கொள்ள தற்காலிக தடைவிதிக்கப்பட்டிருக்கும் வேளையில் காலாவதியான விசிட் விசாக்கள் மேலும் மூன்று மாத காலத்திற்கு செல்லுபடியாகும். இதற்கு எவ்வித கட்டணங்களும் வசூலிக்கப்படாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாத துவக்கத்தில், ரெசிடென்சி அனுமதி மற்றும் விசிட் விசாக்களுக்கான காலாவதி தேதிகள் மேலும் 3 மாதத்திற்கு நீட்டிக்கப்படும் என சவூதி அரசால் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கொரோனா காரணமாக தனி நபர்கள், தொழில்கள், முதலீட்டாளர்கள், தனியார் துறைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை குறைக்கும் வகையில் இம்முடிவினை அரச தலைமை எடுத்துள்ளது.

Related posts