saudi_visa_
Image Credit : Gulfnews

காலாவதியான ரெசிடென்சி விசாக்கள் மேலும் ஒரு மாத காலத்திற்கு செல்லுபடியாகும் – சவூதி அரசு அறிவிப்பு..!

காலாவதியான ரெசிடென்சி விசாக்களை கையில் வைத்திருந்து தற்போது சவூதிக்கு வெளியே இருப்பவர்களுக்கான கருணை காலம் மேலும் ஒரு மாத காலத்திற்கு இலவசமாக நீட்டிக்கப்படுவதாக பாஸ்போர்ட் தலைமை இயக்குனரகம் அறிவித்திருக்கிறது.

காலாவதியான ரீ- என்ட்ரி மற்றும் எக்சிட் பெர்மிட்களுக்கான செல்லுபடியாகும் தேதியும் ஒரு மாத காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக இயக்குனரகம் தெரிவித்திருக்கிறது. வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் வர்த்தகர்கள் வைத்திருக்கும் காலாவதியான ரீ- என்ட்ரி மற்றும் எக்சிட் பெர்மிட்களுக்கான செல்லுபடியாகும் தேதியும் மேலும் ஒருமாத காலம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

இந்த கருனைகால நீட்டிப்பைப் பெற வர்த்தகர்களின் ரெசிடென்சி விசாவானது ஆகஸ்டு 1 – 31 ஆகிய தேதிகளுக்குள் காலாவதியானதாக இருத்தல் வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், சமூக முன்னேற்றம், தேசிய தகவல் மையம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

வீட்டு வேலை செய்பவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கான ரீ- என்ட்ரி மற்றும் எக்சிட் பெர்மிட்களுக்கான செல்லுபடியாகும் தேதியும் ஒருமாதம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சவூதிக்கு வெளியே உள்ள ரெசிடென்சி விசா வைத்திருக்கும் பணியாளர்கள், எக்சிட் மற்றும் ரீ என்ட்ரி பெர்மிட் வைத்திருக்கும் வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள் இந்த அறிவிப்பின் மூலமாக பயன்பெறலாம் ஆனால், அவர்களின் ரெசிடென்சி விசாவானது சவூதிக்கு வெளியே இருக்கையில் காலாவதியானதாக இருத்தல் வேண்டும்.

தானாகவே இந்த கால நீட்டிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என்பதால் மக்கள் பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கு வரத் தேவையில்லை என அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இந்த கருணைகால நீட்டிப்பு செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் நிறைவுபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை மாத துவக்கத்தில், ரெசிடென்சி அனுமதி மற்றும் விசிட் விசாக்களுக்கான காலாவதி தேதிகள் மேலும் 3 மாதத்திற்கு நீட்டிக்கப்படும் என சவூதி அரசால் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து மேலும் அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Related posts

error: Alert: Content is protected !!