grocery
Image Credits- Gulf News

சவூதி அரேபியாவில் டிரைவ் த்ரு டிரக் மளிகை கடைகள் அறிமுகம்..!

சவூதி அரேபியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காகவும், சூப்பர் மார்க்கெட்டுகளில் அலைமோதும் கூட்டத்தை குறைப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாகவும், பழங்கள் மற்றும் காய்கறிகளை விற்பனை செய்யும் முதல் மொபைல் டிரைவ் த்ரு டிரக் மளிகை கடைகளை அல் கோபரின் கிழக்கு மாகாண நகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த குளிரூட்டப்பட்ட டிரைவ் த்ரூ மளிகை கடைகளிலிருந்து வாடிக்கையாளர்கள் ஃப்ரஷ் காய்கறி மற்றும் பழங்களை தங்கள் வாகனங்களில் இருந்து கொண்டே நேரடியாக ஷாப்பிங் செய்ய முடியும்.

இதுகுறித்து அல் கோபரின் மேயர் சுல்தான் பின் ஹமீத் அல் ஜைதி கூறுகையில், இந்த புதுமையான மார்க்கெட்டானது தெற்கு அல் கோபரில் உள்ள இஸ்கான் ஸ்கொயர்(Iskan Square) பூங்காவின் வாகன நிறுத்துமிடத்தில் 6,500 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டு, கடந்த வெள்ளிக்கிழமை முதல் செயல்பட்டு வருகிறது என்று கூறினார்.

மேலும் அவர் கூறும்போது, சொந்த உணவு டிரக்குகள் வைத்திருக்கும் சவூதி இளைஞர்களுடன் நகராட்சி ஒருங்கிணைந்து செயல்படுவதால் இளைஞர்கள் இதன் மூலம் பயன்பெற முடியும் என்று கூறினார்.

காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும் இந்த மார்க்கெட்டின் வேலை நேரங்களில் தினமும் சுத்தம் செய்வதற்காக நகராட்சி மூலம் 10 துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பாதுகாப்பு நெறிமுறைகளை சரிவர பின்பற்றுகிறார்களா என்பதை உறுதி செய்வதற்காக நகராட்சியை சேர்ந்த சுகாதார மேற்பார்வையாளர்கள் (Health supervisors), பாதுகாப்பு மேற்பார்வையாளர்களுடன் (security and safety supervisors) ஒன்றிணைந்து களப்பணியாற்றுகிறார்கள்.

Source: Gulf News

Related posts