offence
Image Credits- Gulf News

வெளிநாட்டவரை துன்புறுத்திய சவூதி குடிமகன் கைது..!

சவூதி அரேபிய ஆண்களின் பாரம்பரிய தலைக்கவசத்தில் பயன்படுத்தப்படும் அதே துணியால் செய்யப்பட்ட முககவசத்தை அணிந்ததற்காக சவூதி அரேபியாவில் வசிக்கும் வெளிநாட்டவர் ஒருவரை, சவூதி குடிமகன் ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டியும், அடித்தும் துன்புறுத்திய காட்சிகள் வீடியோவில் பதிவாகியதையடுத்து துன்புறுத்திய சவூதி குடிமகனை சவூதி பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

தென்மேற்கு சவூதி அரேபியாவின் செங்கடலுக்கு (Red Sea) அருகிலுள்ள அஸீர் மாகாணத்தின் தலைநகரான அபாவில் இந்த சவூதி குடிமகன் கைது செய்யப்பட்டதாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் பொது வழக்கு ஆணையம் பிறப்பித்த உத்தரவைப் தொடர்ந்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஷெமக் (குத்ரா) தயாரிக்கப் பயன்படுத்தப்படும் துணியினால் தயாரிக்கப்பட்ட முக கவசத்தை அணிந்ததற்காக சவூதியில் வசிக்கும் வெளிநாட்டவர் ஒருவர், சவூதி குடிமகனால் அவமதிக்கப்பட்டு, தாக்கப்படும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியது.

இதையடுத்து பொது வழக்கு ஆணையத்துடன் சம்மந்தப்பட்ட கண்காணிப்பு மையமானது சவூதி குடிமகன், சவூதியில் வசிக்கும் வெளிநாட்டவரை இழிவாக பேசியது மற்றும் அவரை தாக்கிய வீடியோவின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்த பின்னரே சவூதி குடிமகன் கைது செய்யப்பட்டுள்ளார்

பொதுமக்கள் அனைவரும் பொறுப்புணர்ச்சியுடன் வாழ வேண்டும், சக மனிதர்களிடம் பழகும் போது அவர்களது கன்னியத்திற்கும், மதம் சார்ந்த கொள்கைகளுக்கும் மரியாதை அளிக்க வேண்டும் என்று பொது வழக்கு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிப்பவர்கள் மற்றும் மனித கவுரவத்தை சீர் குழைக்கும் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டால், அவர்கள் மீது எவ்வித பாரபட்சமும்
காட்டாமல் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தரப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts