jeddah
Image Credits- Riyadh Xpress

ஜித்தாவில் மீண்டும் கடுமையாகும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்..! மசூதிகளில் தொழுகைக்கு தடை..!

ஜித்தாவில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாளை ஜூன் 6 (14 ஷவ்வால் 1441 AH ) முதல் ஜூன் 20 (28 ஷவ்வால் 1441 AH) வரை 15 நாட்களுக்கு மீண்டும் கடுமையாக்க சவூதி அரேபியாவின் அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக உள்துறை அமைச்சகம் இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று நோயின் நிலைமை தீவிரம் அடைந்ததையடுத்து ஜித்தா நகரத்தில் பல்வேறு தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அதிக அளவு நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை ஆய்வு செய்த திறமையான அதிகாரிகள் வகுத்த பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜித்தாவில் மீண்டும் அமல்படுத்தப்படும் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

  • ஜித்தா முழுவதும் மாலை 3 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
  • மசூதிகளில் தொழுகைக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • அமைச்சகங்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் பணியிட வருகைக்கு (work place attendance) தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • உணவகங்கள் மற்றும் கபேக்கள் ஆகியவற்றில் சாப்பிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • ஐந்து பேருக்கு மேல் ஒன்று கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், விமானம் மற்றும் நிலம் வழியாக அனைத்து உள்நாட்டு பயணங்களும் அனுமதிக்கப்படும். மேலும் ஊரடங்கு அமலில் இல்லாத நேரங்களில் நகரத்திற்கு உள்ளேயும் வெளியேயும் செல்வதற்கு தடை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Saudi Gazette

Related posts

error: Alert: Content is protected !!