கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா, அர்ஜென்டினா மற்றும் பிரேசில் ஆகிய மூன்று நாடுகளில் இருந்து மக்கள் சவூதி வர தற்காலிகத் தடை விதித்திருப்பதாக சவூதி விமானப் போக்குவரத்து தலைமை இயக்குனரகம் அறிவித்திருக்கிறது.
அதுமட்டுமல்லாமல், சவூதி வருவதற்கு முன்னதான 14 நாட்களுக்குள் இந்த மூன்று நாடுகளுக்குச் சென்ற பிற நாட்டினருக்கும் சவூதி வரத் தற்காலிகத் தடை விதித்திருப்பதாக விமானப் போக்குவரத்து தலைமை இயக்குனரகம் தெரிவித்திருக்கிறது.
அரசு முறைப் பயணமாக சவூதி வருவோருக்கு இத்தடையில் விலக்கு அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 15 முதல் செல்லுபடியாகும் விசாக்களை வைத்திருப்பவர்கள் சவூதி திரும்பலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.