flight restrictions
Image Credit: Alamy Image

செல்லுபடியாகும் அனைத்து விதமான விசாக்கள் மூலமாகவும் மக்கள் சவூதிக்கு வரலாம் – வெளிவந்தது அறிவிப்பு..!

கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் சர்வதேச விமானப் போக்குவரத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடைகளில் பாதியளவை தளர்த்துவதாக சவூதி உட்கட்டமைப்புத்துறை அமைச்சகம் நேற்று அறிவித்திருக்கிறது.

செல்லுபடியாகும் ரெசிடென்சி பெர்மிட் அல்லது விசாக்களை வைத்திருக்கும் வளைகுடா குடிமக்கள் மற்றும் சவூதியை தாய் நாடாகக் கொள்ளாதவர்கள் செப்டம்பர் 15 முதல் சவூதி திரும்பலாம். முக்கியமாக அவர்கள் கொரோனாவினால் பாதிக்கப்படாதவராக இருத்தல் வேண்டும் என சவூதி பத்திரிகை முகமை நேற்று அறிவித்திருக்கிறது.

செல்லுபடியாகும் வேலைக்கான விசா, விசிட் விசா, எக்ஸிட் மற்றும் ரீ என்ட்ரி விசா மூலமாகவும் மக்கள் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் சவூதி திரும்பலாம். பயணிகள் அனைவரும் தங்களது பயண நேரத்திற்கு முன்னதான 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழை வைத்திருப்பது அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விதிவிலக்கான பிரிவுகளைச் சேர்ந்தவர்களான அரசு மற்றும் ராணுவப் பணியாளர்கள், அயல்நாட்டு தூதரக அதிகாரிகள், மருத்துவ உதவி தேவைப்படுவோர் ஆகியோரும் செப்டம்பர் 15 ஆம் தேதியிலிருந்து சவூதி திரும்பலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

விமான, தரை, நீர்வழி உள்ளிட்ட அனைத்து விதமான போக்குவரத்திற்கும் விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடைகளும் ஜனவரி 1 ஆம் தேதிக்குப் பிறகு முழுவதும் விலக்கிக்கொள்ளப்படும் எனவும் அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. இருப்பினும் தடைகள் நீக்கம் பெறும் துல்லியமான தேதி அறிவிக்கப்படவில்லை.

கொரோனா காரணமாக உம்ரா யாத்திரைக்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடையும் விரைவில் படிப்படியாக நீக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

error: Alert: Content is protected !!