sports
Image Credits- Gulf News

விளையாட்டு போட்டிகளுக்கான தடையை நீக்குகிறது சவூதி..!

சவூதி அரேபியாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக விளையாட்டு நடவடிக்கைகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், வரும் ஜூன் 21 முதல் விளையாட்டு கிளப்புகள் மீதான தடையை தளர்த்தி, பயிற்சியை மீண்டும் தொடங்க சவுதி அரேபியா முடிவு செய்துள்ளது.

கொரோனா வைரஸை எதிர்த்து போராடும் குழுவுடன் ஒருங்கிணைந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று சவூதி விளையாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் ஸ்போர்ட்ஸ் அசோசியேசன் விளையாட்டு போட்டிகளை மீண்டும் தொடங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரசிகர்கள் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

சவூதி அரசாங்கம் விளையாட்டு நடவடிக்கைகளுக்கு கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையில் அனுமதியளித்துள்ள காரணத்தினால், விளையாட்டு பயிற்சியின் போது கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சவூதி விளையாட்டு அமைச்சகம், சவூதி அரேபிய ஒலிம்பிக் கமிட்டி மற்றும் விளையாட்டு கூட்டமைப்புகளுடன் (sports federations) ஒருங்கிணைந்து, விளையாட்டு துறையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கும், மேற்பார்வையிடுவதற்கும் தேவைப்படும் வழிமுறைகளை கண்டறியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் தொடங்கப்படும் விளையாட்டு நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவதற்கும், கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரத்தை தொடர்ந்து கண்காணிக்கும் குழுவுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கும் ஒரு குழுவை அமைப்பதற்கான ஆணையை விளையாட்டு அமைச்சர் இளவரசர் அப்துல் அஜிஸ் பின் துர்கி அல் பைசல் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் விளையாட்டு வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் சரியான நேரத்தில் எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Gulf News

Related posts