Umrah to resume
Image Credit: AFP file photo

சவூதி அரேபியா: உம்ரா யாத்திரைக்கு மக்கள் அனுமதிக்கப்படுவர் என அரசு அறிவிப்பு – பிரார்த்தனையாளர்கள் மகிழ்ச்சி..!

உம்ரா யாத்திரைக்கு சவூதியில் இருப்போர் மட்டுமே குறிப்பிட்ட எண்ணிக்கையில் விரைவில் அனுமதிக்கப்படுவார்கள் என செய்தி வெளியிட்டிருகிறது சவூதி கெசட்.

கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் போன்ற கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உம்ரா யாத்திரையின்போது பின்பற்றப்படும் என அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பிரார்த்தனையாளரும் உம்ரா செய்வதற்கான தேதி மற்றும் நேரம் ஆகியவை மொபைல் அப்ளிகேஷன் மூலமாகத் தெரிவிக்கும் நடைமுறையும் ஏற்படுத்தப்பட இருக்கிறது. அதேபோல மக்கள் உம்ரா யாத்திரையின் போது பின்பற்றவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹஜ் மற்றும் உம்ரா சேவைகளுக்கான இணை அமைச்சர் ஹுசைன் அல் ஷரீஃப் (Hussein Al Sharif),” கொரோனா பெருநோய் காலத்திலும் ஹஜ் யாத்திரையை மக்கள் மேற்கொள்ள சிறப்பான முறையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அதில் வெற்றியும் கண்டுள்ளோம். அந்த அனுபவத்தைப் பயன்படுத்தி உம்ரா சேவைகளையும் மக்களுக்கு எளிதில் வழங்க தேவையான முயற்சிகள் எடுத்துவருகிறோம்” எனத் தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அரசு வெளியிட்ட அறிவிப்பில் சவூதியில் விமான, நீர்வழி மற்றும் தரைப் போக்குவரத்திற்கு விதிக்கப்பட்டிருக்கும் அனைத்து தடைகளும் அடுத்தாண்டு ஜனவரி 1 ஆம் தேதிக்குப் பிறகு முழுமையாக விலக்கிக்கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் அந்த அறிவிப்பில், செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் செல்லுபடியாகும் ரெசிடென்சி, விசிட், என்ட்ரி, எக்ஸிட், வேலைக்கான விசா வைத்திருப்போர் சவூதி வரலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

உம்ரா சேவைகளைப் பொறுத்தவரையில், அதற்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் படிப்படியாக விலக்கிகொள்ளப்படும் என ஞாயிற்றுக்கிழமை வெளிவந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து மேலும் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Related posts

error: Alert: Content is protected !!