precautionary measures

சவூதியில் சட்ட விரோதமாகத் தயாரிக்கப்பட்ட 2000 முகக்கவசங்கள் பறிமுதல்

சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்ட 2,000 க்கும் மேற்பட்ட துணியாலான முகக்கவசங்களை சவூதி அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக சவூதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

covid – 19 பதற்ற நிலையைத் தவறாகப் பயன்படுத்தி மக்காவில் உள்ள வெளிநாட்டைச் சேர்ந்தவர்களால் சட்டத்திற்குப் புறம்பான முறையில் தயாரிக்கப்பட்ட 2000 முகக்கவசங்களை வர்த்தக அமைச்சகம் கைப்பற்றியுள்ளது. எந்தவொரு முன் அனுபவமோ, சோதனை நிறுவனங்களிடமிருந்து தகுந்த சான்றிதழோ இல்லாமல் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களைத் தயாரிப்பதன் மூலம் சந்தேகத்திற்கு இடமின்றி வாங்குபவர்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்று சவூதி இணைய நாளிதழான Sabq தெரிவித்துள்ளது.

இது போன்ற நடவடிக்கைகளுக்குப் பின்னால் உள்ளவர்கள் மீது வழக்குத் தொடரப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நம்பத்தகாத உற்பத்தியாளர்களால் தயாரிக்கப்படும் 3-ply முகக்கவசங்கள் தரமற்றவையாக இருக்கின்றன. பெரும்பாலும் இவற்றில் மத்திய வடிகட்டுதல் அடுக்கு (Central Filtration Layer) இருப்பதில்லை என பெயர் தெரிவிக்க விரும்பாத பல உற்பத்தியாளர்கள், சுகாதார வல்லுநர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொடிய தொற்றுநோயான கொரோனா வைரசைக் கட்டுப்படுத்துவதில் சவூதி அரேபியா தீவிரம் காட்டி வருகிறது.

Related posts