shisha
image credits: Saudi Gazette

கொரோனா பரவுவதைத் தடுக்க சவூதியில் ஷிஷாவிற்குத் தடை நீட்டிப்பு.!

கொரோனா வைரஸ் பரவுதலில் இருந்து குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களைப் பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஒன்றாக ஷிஷா வழங்குவதற்கான தடையைத் தொடர்வதோடு, உணவகங்களில் குழந்தைகள் விளையாடுவதற்கான இடங்களை மூடுவதாகவும் சவூதி நகர்ப்புற மற்றும் ஊரக விவகாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் நெருக்கடிக்குப் பின்னர் உலகம் முழுவதும் தோன்றியுள்ள “சமூக இடைவெளி” என்னும் கருத்தை மையமாகக் கொண்டு,  ஊரடங்கிற்குப் பின்னதான புதிய காலகட்டத்தில் சவுதி வைரஸுடன் இணைந்து வாழப் பழக இருக்கிறது.

இந்தப் புதிய வாழ்க்கைமுறை மக்கள் முகக்கவசம் அணிந்து வாய் மற்றும் மூக்குப் பகுதிகளை மூடுவதோடு மட்டுமல்லாமல் பொது இடங்களில் ஒருவருக்கொருவர் 2 மீட்டர் தூரம் இடைவெளியைக் கடைபிடிப்பதையும் வலியுறுத்துகிறது.

மேலும் இது 50 க்கும் மேற்பட்ட நபர்கள் ஒரு இடத்தில் கூடக் கூடாது என வலியுறுத்துவதோடு, பணியிடங்கள், கடைகள் மசூதிகள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் தடுப்பு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டுமென்றும் அறிவுறுத்துகிறது.

Related posts