Saudi

வெளிநாட்டவர்கள் தங்கள் ஸ்பான்சர்ஷிப்பை சுலபமாக மாற்றிக் கொள்ள புதிய மின்னணு சேவை- சவூதி அறிவிப்பு

சவூதி அரேபியாவின் மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் சமீபத்தில் ஒரு புதிய மின்னணு சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது மனித வள அமைச்சகத்தின் கிளைகளை அணுக வேண்டிய தேவையின்றி, நிறுவனங்களின் தொழிலாளர்கள் அல்லது தனியார் ஸ்பான்சர்ஷிப்பின் கீழ் உள்ள வெளிநாட்டவர்கள், தங்கள் ஸ்பான்சர்ஷிப்பை தனியார் துறை நிறுவனங்களுக்கு மாற்றிக் கொள்ள அனுமதிக்கிறது.

எப்படி விண்ணப்பிப்பது ?

  • வெளிநாட்டைச் சார்ந்தவர்களை சேவைப் பணியாளர்களாகத் தேடும் நிறுவனங்கள் அமைச்சகத்தின் மின்னணு சேவை போர்ட்டலில் நுழைய வேண்டும்.
  • பின்னர் ஸ்பான்சர்ஷிப் சேவையை மாற்றுவதற்கான கோரிக்கை ஐகானைக் கிளிக் செய்து, தேவையான தொழிலைத் தேர்வு செய்ய வேண்டும்.
  • விண்ணப்பத்தை சமர்ப்பித்தவுடன், ஸ்பான்சர்ஷிப்பில் வசிப்பவரின் நிலை, “பாதுகாவலரின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது.” (“pending the approval of the guardian.”) என்று திரையில் தோன்றும்.
  • அதன் பின்னர் வெளிநாட்டவர் அப்சர் (Absher) போர்ட்டலின் தேசிய அணுகல் சேவையில் நுழைந்து தனது ஸ்பான்சர்ஷிப்பை மாற்றக் கோரும் விண்ணப்பத்திற்கு ஒப்புதலோ அல்லது மறுப்போ தெரிவிக்கலாம்.

ஸ்பான்சர்ஷிப் பரிமாற்றம் அங்கீகரிக்கப்பட்டால், கோரிக்கை உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அல்லது ஏதேனும் விவரங்களை வழங்குவதற்காக அனுப்பப்படும். உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலைப் பெற்று விட்டால், சேவை நடைமுறைகளை மாற்றுவது தொடர்பாக 14 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட நிறுவனம் பாஸ்போர்ட் இயக்குநரகத்தின் கிளைகளை அணுக வேண்டும். இந்தக் குறிப்பிட்ட காலத்திற்குள் நடைமுறைகளை நிறைவு செய்ய நிறுவனம் தவறிவிட்டால் சேவை ரத்து செய்யப்படும்.

நிபந்தனைகள் என்ன ?

  • இந்த ஸ்பான்சர்ஷிப் பரிமாற்ற நடைமுறைகளின் போது, பாதுகாவலரின் பெயரிலும், அடையாள எண்ணிலும் ஸ்பான்சர்ஷிப் சேவையை மாற்றுவதற்கான கட்டணங்களை வங்கி மூலம் செலுத்த வேண்டியது அவசியம்.
  • ஸ்பான்சர்ஷிப்பை மாற்ற விரும்பும் சார்புடையவர் 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
  • அதேபோல், அவர் ஸ்பான்சர்ஷிப் சேவைகளை மாற்றும் நடைமுறைகள் தடை செய்யப்பட்ட எந்தவொரு நாட்டையும் சேர்ந்தவராக இருக்கக் கூடாது.
  • வெளிநாட்டவர் மற்றும் பாதுகாவலர் இருவரும் முறையான குடியிருப்பு அனுமதி (iqama) பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் வெளிநாட்டவர் தற்போது சவூதியில் பணிபுரிபவராக இருக்க வேண்டும்.

Related posts