சவூதி அரேபியாவின் மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (Salman bin Abdulaziz) ரியாத் நகரில் உள்ள ஃபைசல் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக SPA செய்தி நிறுவனம் இன்று அதிகாலை அறிவித்திருக்கிறது.
உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடான சவூதியின் மன்னர் அஜீஸ் அவர்களுக்கு ஏற்பட்ட பித்தப்பை வீக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த மேற்கட்ட விபரங்கள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.
#عاجل
بيان من الديوان الملكي : #خادم_الحرمين_الشريفين يدخل مستشفى الملك فيصل التخصصي بالرياض لإجراء بعض الفحوصات جراء وجود التهاب في المرارة.
حفظ الله خادم الحرمين الشريفين وألبسه ثوب الصحة والعافية.#واس pic.twitter.com/yzd8dEJPdU— واس الأخبار الملكية (@spagov) July 20, 2020
மன்னராவதற்கு முன்பு 2.5 வருடங்கள் பட்டத்து இளவரசராக இருந்த அஜீஸ் அவர்கள், 2012 ஜூன் முதல் துணைப் பிரதமராகவும் பதவி வகித்தார்.
84 வயதான அஜீஸ் அவர்கள், ரியாத் நகரின் ஆளுநராக 50 வருடங்கள் ஆட்சியில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.