king Abdulaziz

சவூதி மன்னருக்கு வெற்றிகரமாக நடந்து முடிந்தது அறுவை சிகிச்சை!

சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல்அஜிஸ் அவர்களுக்கு பித்தப்பை நீக்க அறுவை சிகிச்சை கிங் பைசல் சிறப்பு மருத்துவமனையில் வெற்றிகரமாக முடிந்துள்ளதாக இன்று (வியாழக்கிழமை) அறிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு மேற்கொள்ளப்பட்ட லேபரஸ்கோபிக் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது என்றும், அவர் பூரண குணமடைவதற்காக சிறிது காலம் மருத்துவமனையில் இருப்பார் என்றும் சவூதி பத்திரிகை முகமை அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டுள்ளது.

மன்னர் சல்மான் தனது மருத்துவக் குழு பரிந்துரைத்துள்ளபடி சிறிது காலம் மருத்துவமனையில் இருப்பார் என ராயல் திவான் தெரிவித்துள்ளார்.

மேலும், மன்னர் சல்மான் சவூதி மக்களின் உளமார்ந்த பிரார்த்தனைகளுக்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, 84 வயதான சவூதி மன்னர் சல்மான் அவர்கள் பித்தப்பை வீக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கடந்த திங்கள் அன்று அறிவிக்கப்பட்டிருந்தது.

Related posts

error: Alert: Content is protected !!