Capture
Image Credits- Gulf News

40க்கும் அதிகமான இடத்தில் கைவரிசை காட்டிய பலே திருடன்..!

சவூதியில் ATM, ஷாப்பிங் சென்டர்கள் மற்றும் மருந்தகங்களை குறிவைத்து
பல்வேறு வகையான திருட்டு சம்பவங்கள் மற்றும் கொள்ளைகளில் ஈடுபட்ட சவூதி நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கிழக்கு ரியாத்தில் ATM மையத்தை அடித்து நொறுக்கும் போது குற்றவாளி ஒருவர் பிடிபட்டதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் கர்னல் சக்கர் அல் துவிஜ்ரி தெரிவித்துள்ளார்.

இவர் மொத்தம் 40 இடங்களில் கொள்ளையடித்துள்ளார். இதில் 7 திருட்டு சம்பவங்கள் ஷாப்பிங் சென்டர்களிலும், 6 திருட்டு சம்பவங்கள் ரியாத்துக்கு வெளியே உட்பட 33 மருந்தகங்களிலும் கொள்ளையடித்ததை அந்த குற்றவாளி ஒப்புக்கொண்டதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார். மேலும் இந்த பலே திருடன் திருடியதின் ஒட்டுமொத்த மதிப்பு 280,000 சவுதி ரியால்கள் என்று காவல் துறை அதிகாரி சுட்டிக்காட்டினார்.

இறுதியாக “குற்றவாளி கைது செய்யப்பட்டு பொது வழக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்வதற்கான சட்டமுறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று கர்னல் அல் துவிஜ்ரி தெரிவித்தார்.

Source: Gulf News

Related posts

error: Alert: Content is protected !!