saudi
Image Credit : Argaam

சவூதி தேசிய தினம் : பொது மற்றும் தனியார் துறைகளுக்கு விடுமுறை அறிவித்தது அரசு..!

சவூதியில் வருகின்ற செப்டம்பர் 23 ஆம் தேதியன்று 90 வது தேசிய தினம் கொண்டாடப்பட இருப்பதால், பொது மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு விடுமுறையை அறிவித்திருக்கிறது மனிதவள மேம்பாடு மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான அமைச்சகம்.

பொதுத் துறை ஊழியர்களுக்கு செப்டம்பர் 23, 24 (புதன் மற்றும் வியாழன்) ஆகிய தேதிகளிலும் தனியார் துறை ஊழியர்களுக்கு 23 ஆம் தேதியும் (புதன் மட்டும்) விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சகம் வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1932 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி மன்னர் அப்துல் அஜீஸ் அவர்களால் சவூதி ஒருங்கிணைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 23 ஆம் தேதி சவூதி தேசிய தினம் கொண்டாடப்பட்டுவருகிறது.

கடந்த 2005 ஆம் ஆண்டு இந்த தினம் தேசிய விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

error: Alert: Content is protected !!