சவூதி அராம்கோ நேற்று (செப்டம்பர் 10) எரிபொருள் விலையை அதிகரித்துள்ளதாக சவூதி பத்திரிகை நிறுவனம் (SPA) தெரிவித்துள்ளது.
இதன்படி செப்டம்பர் மாதத்திற்கான பெட்ரோல் 91 இன் விலை லிட்டருக்கு 1.43 சவூதி ரியாலிருந்து 1.47 சவூதி ரியால் ஆகவும், பெட்ரோல் 95 இன் விலை லிட்டருக்கு 1.60 சவூதி ரியாலிருந்து 1.63 சவூதி ரியால் ஆகவும் அதிகரித்துள்ளது. அதைபோல் டீசல், மண்ணெண்ணெய் மற்றும் LPG யின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
எரிபொருள் | ஒரு லிட்டர் முந்தைய விலை |
ஒரு லிட்டர் தற்போதைய விலை |
பெட்ரோல் 91 | 1.43 சவூதி ரியால் | 1.47 சவூதி ரியால் |
பெட்ரோல் 95 | 1.60 சவூதி ரியால் | 1.63 சவூதி ரியால் |
டீசல் | 0.52 சவூதி ரியால் | மாற்றம் இல்லை |
மண்ணெண்ணெய் | 0.70 சவூதி ரியால் | மாற்றம் இல்லை |
LPG | 0.75 சவூதி ரியால் | மாற்றம் இல்லை |
சவூதியிலிருந்து உலக சந்தைக்கு விற்பனை செய்யப்படும் பெட்ரோல் மற்றும் எரிபொருளின் விலையில் ஏற்படும் மாற்றமானது உள்ளூர் பெட்ரோல் மற்றும் எரிபொருளின் விலையை பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.