safety
Image Credits- Saudi Gazette

ஜித்தா வந்தடைந்த 1 கோடிக்கும் அதிகமான முககவசங்கள்..!

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காகவும், மருத்துவ தேவையை பூர்த்தி செய்வதற்காகவும் ஜித்தாவிலுள்ள உள்ள கிங் அப்துலஜிஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று (திங்கள்கிழமை) 14,000,000 முககவசங்கள் வந்தடைந்தது.

இதுகுறித்து சவுதி உணவு மற்றும் மருந்து ஆணையத்தின் (SFDA) நிர்வாக இயக்குனர் மூசா பின் சுலைமான் அல்-ஃபிஃபி கூறுகையில், மருத்துவ தேவைகளுக்காக சவூதியின் பல்வேறு துறைமுகங்கள் வாயிலாக மருந்துப் பொருட்கள் கொண்டு வரப்பட்டதன் தொடர்ச்சியாகவே இத்திட்டம் உள்ளது என்று கூறினார்.

இதையடுத்து தற்போது கொண்டு வரப்பட்டிருக்கும் இந்த முக கவசங்களானது கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வண்ணம் மருந்தகங்கள் மற்றும் மார்கெட்களுக்கு விநியோகிக்கப்படும் என்று கூறினார்.

Source: Saudi Gazette

Related posts