rescue
Image Credits- Gulf News

சவூதி அரேபியாவில் நிலத்தடி நீர் குழாய்க்குள் சிக்கி ஆறு தொழிலாளர்கள் பலி..!

ரியாத்தில் ஒரு திட்டத்திற்கான கட்டுமான பணிகள் நடந்து கொண்டிருந்த போது நிலத்தடி நீர் குழாயில் சிக்கி 6 தொழிலாளர்கள் இறந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து ரியாத் சிவில் பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் கர்ணல் முகமது அல் ஹம்மடி கூறுகையில், “புதன்கிழமை இரவு 9:30 மணியளவில் எங்களுக்கு ஒரு அறிக்கை கிடைத்தது. அதில் ரியாத்தில் உள்ள அல் அஜீசியா சுற்றுப்புறத்தில் ஒரு திட்டத்திற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று கொண்டிருந்த போது நிலத்தடி நீர் குழாயில் வேலை செய்து கொண்டிருந்த 6 பேரை காணவில்லை” என்று ஹம்மடி கூறினார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த சிவில் பாதுகாப்பு குழுவினர், காணாமல் போன தொழிலாளர்கள் 6 பேரும் அல் அஜீசியாவில் நடைபெறும் திட்டத்தை செயல்படுத்தும் ஒரு ஒப்பந்த நிறுவனத்தின் ஊழியர்கள் என்பதை கண்டறிந்தனர் என்று அவர் கூறினார்.

அல் அஜீசியாவின் இத்திட்டத்தில் தொழிலாளர்கள் தண்ணீர் குழாய்க்குள் சில பணிகளை மேற்கொண்டிருந்த நேரத்தில் வெளியில் இருந்த சக ஊழியர்களுடனான தொடர்பு துண்டானதால் அவர்களால் வெளியேற முடியவில்லை. 360 மீட்டருக்கும் அதிகமான ஆழத்தில் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டதால் இறந்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

மீட்புக் குழுக்கள் தொழிலாளர்களை வெளியேற்ற அதற்குண்டான சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தினர். ஆனால் எதிர்பாராத விதமாக மீட்பதற்கு முன்னரே அவர்கள் 6 பேரும் அந்த இடத்தில் இறந்து கிடந்தனர். இறந்ததற்கான காரணங்களை கண்டறிய ரியாத் போலீசார் விசாரணையைத் துரிதப்படுத்தியுள்ளனர் என்று கர்ணல் அல் ஹம்மடி தெரிவித்தார்.

Source: Gulf News

Related posts

error: Alert: Content is protected !!