Smokers facing difficlties in corona
Image Courtesy : we-care.co.za

கொரோனா வைரஸால் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் புகை பிடிப்பவர்கள் – சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தாக்குவதால் அதிக பாதிப்புக்குள்ளாகுபவர்கள் பட்டியலில் புகை பிடிப்பவர்கள் இடம் பெற்றுள்ளதைத் தொடர்ந்து, புகை பிடிப்பதால் ஒரு தனி நபருக்கு மற்றும் சமூகத்திற்கு ஏற்படும் பாதகமான விளைவுகள் குறித்து சவூதி சுகாதார அமைச்சகம் (MoH) எச்சரித்துள்ளது.

புகை பிடித்தல் நுரையீரல் செயற்பாட்டைக் குறைக்கிறது, நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு தீங்கு விளைவிக்கிறது மற்றும் சுவாச நோய்த்தொற்றுகளால் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது என தனது ட்விட்டர் பக்கத்திலும், விழிப்புணர்வு தளமான “Live Well” என்ற பக்கத்திலும் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு விளக்கப்படங்களில் சுகாதார அமைச்சகம் சுட்டிக் காட்டியுள்ளது.

MAWID அப்ளிகேஷன் 

எனவே, புகைப்பிடிப்பவர்கள் ‘Mawid’ அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நாடு முழுவதுமிருக்கும் ‘புகை பிடிப்போர் மறுவாழ்வு மையங்களில்’ ஒரு சந்திப்பைத் திட்டமிட்டு அவர்கள் மூலம் பயனடையுமாறு சுகாதார அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

நோய் அறிகுறிகளைக் கொண்ட அல்லது சுய மதிப்பீட்டை விரும்பும் எவரும் ‘Mawid’ அப்ளிகேஷனின் சுய மதிப்பீட்டுச் சேவையைப் பயன்படுத்தலாம் என்று  MoH வலியுறுத்தியுள்ளது.

எப்படி தொடர்பு கொள்வது ?

ஏதேனும் சந்தேகம் உள்ளவர்கள், எந்த நேரமும் 937 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு சேவை மையத்தினரிடம் விசாரிக்கலாம் அல்லது ஆலோசனைகள் பெறலாம். இந்த மையம் முன்பை விட தற்போது அனைவரும் எளிதாக அணுகும்படி உள்ளது.

பொதுமக்கள், 920005937 என்ற எண்ணில் WhatsApp ல் அவர்களுடன் உரையாடுவதன் மூலமும் சேவையைப் பெற முடியும். இதன் மூலம் பயனர்கள் covid-19 தொடர்பான சுகாதாரத் தகவல்கள் மற்றும் புதிய அறிவிப்புகளையும் உடனுக்குடன் பெற முடியும்.

மேலும், இந்த சேவை பயனர்களுக்கு இரத்த தானம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் (PHCs) பற்றிய தகவல்களையும் வழங்குகிறது. தவிர, இதன் மூலம் அவர்கள் சந்திப்புகளை முன்பதிவு செய்து கொள்ளவும் இயலும்.

Related posts