rice
Image Credits- Saudi Gazette

சவூதியில் வீணாகும் உணவு தானியங்களில் முதலிடத்தில் அரிசி..!

சவூதியில் அதிகம் வீணாகும் உணவு தானியங்களின் பட்டியலில் அரிசி முதலிடத்தில் உள்ளது. இது சவூதியின் அனைத்து நகரங்களிலும் வல்லுநர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வானது உணவு பாதுகாப்பு நடவடிக்கைகளை நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்டது.

ஆய்வின் நகலை மக்கா செய்தித்தாள் வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில், ஆண்டுக்கு இறக்குமதி செய்யப்படும் அரிசியின் மொத்த அளவு 130,000 டன் ஆகும். அதில் 34 சதவீதம் வீணாகிறது. இருந்த போதிலும் சவூதி அரேபியாவில் அதிகம் உட்கொள்ளப்படும் உணவு தானியங்களில் அரிசி தான் முதலிடம் வகிக்கிறது என்றும் அந்த ஆய்வு ஒப்புக்கொண்டுள்ளது.

அடுத்தப்படியாக மாவு மற்றும் ரொட்டி அதிகமாக வீணடிக்கப்படும் உணவு பொருட்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இது கிடைக்கக்கூடிய மொத்த அளவில் இருந்து 30 சதவீதம் வீணாக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கு அடுத்தபடியாக கோழி இறைச்சி 29 சதவீதம் வீணாக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து காய்கறிகள் பழங்கள் மற்றும் இறைச்சியும் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

விநியோகம், உற்பத்தி, நுகர்வு மற்றும் சேதம் ஆகியவற்றை கணக்கில்கொண்டு மாவு மற்றும் ரொட்டிகளில் வீணாகும் இழப்பின் விகிதம் 917,000 டன் என்று கணக்கிடப்படுள்ளது.

காய்கறிகளில் வீணாகும் இழப்பின் விகிதமானது காய்கறியின் மீதுள்ள சேதம் மற்றும் அவற்றை பாதுகாக்கும் வழிமுறைகள் காரணமாக காலப்போக்கில் மாறுபடுகிறது.

ஆண்டுதோறும் அரிசி 557,000 டன், கோழி இறைச்சி 444,000 டன், செம்மறி மற்றும் ஆட்டு இறைச்சி 22,000 டன், மாட்டிறைச்சி 41,000 டன், ஒட்டக இறைச்சி 13,000 டன், உருளைக்கிழங்கு 201,000 டன், தக்காளி 234,000 டன், மீன் 69,000 டன் மற்றும் வெங்காயம் 110,000 டன் ஆகிய உணவு பொருட்கள வீணாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Saudi Gazette

Related posts