car
Image Credits- Riyadh Xpress

கொரோனா வைரஸ் பரிசோதனையின் மூன்றாம் கட்டத்தை அறிவித்தது சவூதி அரேபியா..!

கொரோனா வைரஸ் பரிசோதனையின் மூன்றாம் கட்டத்தை செயல்படுத்த உள்ளதாக சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த மூன்றாம் கட்ட பரிசோதனையானது கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான மேம்பட்ட அணுகுமுறையை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பரிசோதனையானது டிரைவ்-த்ரூ பரிசோதனையை ஒத்து காணப்படுகிறது.

பல நகரங்களில் நியமிக்கப்பட்ட டிரைவ்-த்ரூ கொரோனா வைரஸ் பரிசோதனை மையத்தின் மூலம் பொதுமக்கள் தங்கள் கார்களில் இருந்தவாறே பரிசோதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்றாம் கட்ட கொரோனா வைரஸ் பரிசோதனையின் பணிகள் மக்கா மற்றும் மதினாவில் முதலில் மேற்கொள்ளப்படும். அதன்பின்னர் அடுத்த வாரம் ரியாத்தில் மேற்கொள்ளப்படும். அதனை தொடர்ந்து மீதமுள்ள மற்ற பகுதிகளில் செயல்படுத்தப்படும்.

இதனிடையில் சவூதி அரேபியாவின் சசுகாதார அமைச்சகம் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது.

மூன்றாம் கட்ட கொரோனா வைரஸ் பரிசோதனையை ஆரம்ப சுகாதார நிலையங்களின் மூலம் மேற்கொள்ள முடியும். கூடுதலாக “செஹாட்டி”(Sehaty) மொபைல் அப்ளிகேஷன் மூலம் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் தங்கள் சொந்த சோதனை மாதிரிகளை(test samples) சேகரிக்க முன் அனுமதி பெற முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

error: Alert: Content is protected !!