embassy

அண்மை செய்தி : சவூதியிலிருந்து இந்தியாவிற்கு செல்லவிருக்கும் சிறப்பு விமானங்கள்..! மூன்று விமானங்கள் தமிழகத்திற்கு..!

நிறுவனங்கள் மற்றும் சமூக குழுக்கள் மூலம் சவூதியிலிருந்து இந்தியாவுக்கு முப்பதிற்கும் மேற்பட்ட சிறப்பு விமானங்கள்(Charter flights) இயக்கப்படவிருக்கின்றன. இதில் தமிழகத்திற்கு 3 விமானங்களும், கேரளாவுக்கு 20 விமானங்களும், டெல்லி மற்றும் மகாராஷ்டிராவுக்கு தலா 2 விமானங்களும், கர்நாடகா மற்றும் தெலுங்கானாவிற்கு தலா ஒரு விமானமும் இயக்கப்பட உள்ளன.

இதற்கு முன்னர் நிறுவனங்கள் மற்றும் சமூக குழுக்கள் மூலம் சவூதியிலிருந்து இந்தியாவுக்கு சென்ற 71 விமானங்களில்(Charter flights) தமிழகத்திற்கு 6, கேரளாவுக்கு 34, டெல்லிக்கு 11, கர்நாடகாவுக்கு 8, உத்திரபிரதேசம் மற்றும் ராஜஸ்தானிற்கு தலா மூன்று, ஆந்திரபிரதேஷ் மற்றும் குஜராத்திற்கு தலா இரண்டு, பிஹார் மற்றும் தெலுங்கானாவிற்கு தலா ஒரு விமானம் ஆகியவற்றின் மூலம் ஏறக்குறைய 13000 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts