mecca
Image Credits- Gulf News

மக்காவில் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்ட இருவர் கைது..!

மக்காவில் அடையாளம் தெரியாத நபருக்கு சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்த 50 வயது மதிக்கத்தக்க இரண்டு அரபு நபர்களை மக்கா போலீசார் கைது செய்துள்ளனர்.

இது குறித்து மக்கா காவல்துறை செய்தித் தொடர்பாளர் மேஜர் முகமது அல் கம்டி கூறுகையில், கைது செய்யப்பட்ட நபர்கள் இதுவரை 1.4 மில்லியனுக்கும் அதிகமான சவூதி ரியால்களை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்துள்ளதாக தெரிவித்தார்.

இவ்விருவரும் சட்ட நடவடிக்கைகளுக்காக பொது வழக்கு விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி தற்போது இவர்கள் இருவரும் விசாரணைக்காக  காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் மேஜர் அல் கம்டி கூறினார்.

Source: Gulf News

Related posts