-airindia-
Image Credit : DNA India

வந்தே பாரத் மிஷன் நான்காம் கட்டம் – ரியாத், தமாம் மற்றும் ஜித்தாவிலிருந்து தமிழகத்திற்கு செல்லும் கூடுதல் விமானங்களின் புதிய அட்டவணை வெளியீடு..!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பல நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக இந்திய அரசால் ‘வந்தே பாரத் மிஷன்’ வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது இந்த மிஷனானது நான்காம் கட்டமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வந்தே பாரத் திட்டத்தின் நான்காம் பகுதியில் சவூதியிலிருந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு விமானங்கள் இயக்கபட்டு கொண்டிருக்கின்றன. அதில் ஏற்கெனவே திருச்சிக்கு இரண்டு விமானங்கள் அறிவிக்கப்பட்டிருந்தது, தற்பொழுது கூடுதலாக சென்னைக்கு நான்கு விமானங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்முலம் தமிழகத்திற்கு செல்லும் விமானங்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

சவூதியிலுருந்து சென்னைக்கு செல்லும் விமானங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வ.எண் பயண தேதி விமானம் புறப்படுமிடம் விமானம் செல்லுமிடம்
1 23.07.2020 ரியாத் சென்னை
2 24.07.2020 தமாம் சென்னை
3 26.07.2020 ரியாத் சென்னை
4 26.07.2020 தமாம் சென்னை

ஏற்கெனவே தமாம் மற்றும் ஜித்தாவிலிருந்து திருச்சிக்கு அறிவிக்கப்பட்டிருந்தது விமானங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஜித்தாவிலிருந்து புறப்படும் விமானம் மும்பை வழியாக திருச்சிக்கு சென்றடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

வ.எண் பயண தேதி விமானம் புறப்படுமிடம் விமானம் செல்லுமிடம்
1 28.07.2020 தமாம் திருச்சி
2 29.07.2020 ஜித்தா திருச்சி

Related posts