flight
Image Credits- Gulf News

வந்தே பாரத் திட்டத்தின் நான்காம் பகுதி – சவூதியிலுருந்து இந்தியாவிற்கு 13 சிறப்பு விமானங்கள் இயக்கப்பட இருப்பதாக அறிவிப்பு! தமிழகத்திற்கு எந்த சிறப்பு விமானமும் இல்லை..!

கொரோனா காரணமாக வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீண்டும் தாயகம் அழைத்துவருவதற்காக ‘வந்தே பாரத் மிஷன்’ என்னும் சிறப்பு விமானப் போக்குவரத்துத் திட்டத்தை செயல்படுத்திவருகிறது இந்திய அரசு.

இந்நிலையில், வந்தே பாரத் திட்டத்தின் நான்காம் பகுதியில் செயல்படுத்தப்பட இருக்கும் சிறப்பு விமானப் போக்குவரத்தின் பயணத்திட்டத்தை இந்திய அரசு வெளியிட்டிருக்கிறது. அதில் குறிப்பிட்டுள்ளபடி, சவூதியிலிருந்து இந்தியாவிற்கு இயக்கப்படும் 13 விமானங்களில் 11 கேரளவிற்கும், 2 டெல்லிக்கும் இயக்கப்பட இருக்கிறது.

இந்திய அரசு அறிவித்திருக்கும் வந்தே பாரத் திட்டத்தின் நான்காம் பகுதியில் தமிழகத்திற்கு ஒரு விமானம் கூட இல்லை. இதனால், சவுதியில் வசிக்கும் தமிழர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். பலர் சமூக வலைத்தளங்களில் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியும் வருகின்றனர்.

Related posts