vande
Image Credits- Riyadh Xpress

நான்காம் கட்ட வந்தே பாரத் மிஷனில் சவூதியிலிருந்து இந்தியாவுக்கு கூடுதல் விமானங்கள் அறிவிப்பு..!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பல நாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக இந்திய அரசால் ‘வந்தே பாரத் மிஷன்’ வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது இந்த மிஷனானது நான்காம் கட்டமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் சவூதியில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை தாயகம் அனுப்புவதற்காக ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் வந்தே பாரத் மிஷனின் நான்காம் கட்டமாக ஜூன் 27, 2020 அன்று விமான சேவையை தொடங்கியது.

இதன்படி ஜித்தாவிலிருந்து அகமதாபாத்திற்கும், தமாமில் இருந்து ஜெய்ப்பூர் மற்றும் ரியாத்தில் இருந்து ஜெய்ப்பூர் ஆகிய இடங்களுக்கு கூடுதலாக மூன்று விமானங்கள் இந்திய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன. அதே நேரம் தமாமிலிருந்து ஜெய்ப்பூருக்கு செல்லவிருக்கும் விமானத்தின் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிக்கப்பட்டுள்ளது.

வந்தே பாரத் மிஷனின் நான்காம் கட்ட திட்டத்தில் சவூதியிலிருந்து தமிழகத்திற்கு செல்வதற்காக எந்த விமானங்களும் இடம்பெறவில்லை. இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூடுதலாக மூன்று விமானங்கள் இந்திய அரசால் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையிலும் துரதிர்ஷ்டவசமாக தமிழகத்திற்கு எந்த விமானங்களும் இயக்கப்படவில்லை. இக்காரணத்தால் சவூதியிலுள்ள தமிழ் மக்கள் பெருத்த ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

 

விமான எண் விமானம் புறப்படுமிடம் வருகை விமான நிலையம் தேதி
SG 9644 ஜித்தா அஹமதாபாத் 02.07.2020
SG 9647 ரியாத் ஜெய்ப்பூர் 03.07.2020
SG 9651 தமாம் ஜெய்ப்பூர் பின்னர் அறிவிக்கப்படும்

Related posts